பொலிக! பொலிக! 05

ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும் இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான். பாடசாலை முடிந்தபிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளைச் சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனைத் தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை. … Continue reading பொலிக! பொலிக! 05